உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதாவே அப்பா (4)
1.
அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா…. – உம்
2.
பிறர் குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே…… – உம்
3.
சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா… – உம்
4.
ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்… – உம்
5.
ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே… – உம்
6.
ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே – உம்
7.
உமக்காய் வாழணும், உம் குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே… – உம்
8.
அனுதின சிலுவையை, ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா…. – உம்
9.
ஆவியில் நிறைந்து, ஜெபிக்க, துதிக்க
ஆர்வம் தாருமையா…. – உம்
10.
என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே… – உம்
11.
அரசியல் தலைவர்கள் M.L.A., M.P,க்கள்
உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே… – உம்